இந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்து கடவுள்கள்கள் என சொல்லப்படுகிற கடவுள்களின் நூல்கள் தெரியவில்லை ??

எனக்கு ஒரு சந்தேகம் இஸ்லாமியனுக்கு குரான் தெரிந்துருக்கும் ,கிருத்துவனுக்கும் பைபிள் தெரிந்துருக்கும் .ஆனால் இந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்து கடவுள்கள்கள் என சொல்லப்படுகிற கடவுள்களின் நூல்கள் தெரியவில்லை ??



கிறிஸ்துவம் இஸ்லாம் இவை எல்லாமே புனித புத்தகங்களை ஆதாரமாக வைத்து தோன்றிய மதங்கள். முஹம்மது நபிகள், யூதர்கள் கிறிஸ்துவர்களை People of the Book என்றுதான் குறிப்பிடுகிறார். சொல்லப்போனால் அவருக்கு அதில் அதீத ஆர்வம் என்று கூட சொல்லலாம்.



புனித புத்தகம் தான் யூதர்கள் கிறிஸ்துவர்களை அவர்களது நம்பிக்கையில் இருந்து வழி மாறாமல் காக்கிறது என்று நினைத்தார். இஸ்லாமிற்கும் ஒரு புத்தகத்தை அவர் குடுத்தார். so இந்த 3 மதங்களிலும் கடவுள் வழிபாட்டை விட கடவுளின் வார்த்தைக்கு தான் அதிக முக்கியத்துவம்.



எனவே அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் அந்த புத்தகத்தை படித்திருப்பதும் அதை பின்பற்றுவதும் கட்டாயம். அடுத்து பாதிரியார்கள் நிறைய கண்டுபிடிப்பு நிகழ்த்தி இருப்பார்கள்.



காரணம், அவர்கள் புனித புத்தகத்தை படிக்கவும் அதை மொழிபெயர்க்கவும் மற்ற நாடுகளுக்கு பிரசங்கம் செய்யவும் எழுத படிக்க மற்றும் பிற புத்தகங்களை படிக்க அறிவும் வளர்ந்தது ஒரு காரணம். இஸ்லாமிய மதத்திலும் இப்படி ஒரு Golden Age இருந்து இருக்கிறது.



அது 8ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை. புனித புத்தகம் என்ற ஒன்று இருக்கும் ஒரே காரணத்தால் எழுத படிக்க கற்று கொண்டு அதன் மூலம் கல்வி அறிவு பெற நேர்ந்ததின் விளைவு இதெல்லாம். அதன்பின் அடிப்படைவாதிகள் வந்து அதை off பண்ணிட்டாங்க அது வேற topic.



இப்போ இந்துக்களுக்கு வருவோம், முதலில் இந்து மதம் என்பது பல கடவுள்களை உள்ளடக்கியது. வேத மதம் வருவதற்கு முன் பலரும் பல சிறு தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். சாதிக்கு ஒரு கடவுள், குலத்திற்கு ஒரு கடவுள், ஒவ்வொரு திணைக்கும் (5 திணை) ஒரு கடவுள், நிலப்பரப்புக்கு ஒரு கடவுள், மொழிக்கு,



இப்படி எக்கச்சக்கமான கடவுள். 90% க்கும் அதிகமான மக்கள் இதுபோன்ற சிறு தெய்வங்களை தான் இன்றும் வழிபட்டு வருகிறார்கள். இதில் ஒரு சாதி கடவுளை இன்னொரு சாதி வழிபடுவதில்லை. குறிஞ்சி நில கடவுளை முல்லை நிலத்தினர் வழிபடுவதில்லை.



பொன்னியின் செல்வன் படத்திலும் பார்த்திருப்பீர்கள் சிவனை வழிபடுபவர்களுக்கும் பெருமாளை வழிபடுபவர்களுக்கும் நடக்கும் சண்டைகளை. இந்த சிறு தெய்வங்கள் உதாரணமாக சுடலை மாடன், கருப்பசாமி போன்ற தெய்வ வழிபாடுகளுக்கு ஒரு systematized teaching கிடையாது.



இவைகளுக்கு தனியே புனித புத்தகங்களோ, வழிபடும் முறைகளை பற்றிய rules and regulations போன்றவையோ இல்லை. பூசாரிகளுக்கு படிப்பறிவும் இருப்பதில்லை. இந்த தெய்வங்களை பற்றிய கதைகள் வாய்வழியே ஒரு குறிப்பிட்ட மக்களிடம் மட்டும் சொல்லப்பட்டு வரும்.



மாரியம்மனை கும்பிடுபவர்களுக்கு கருப்பசாமி பற்றி அக்கறை இல்லை கருப்பசாமியை கும்பிடுபவர்களுக்கு மாரியம்மனை பற்றி அக்கறை இல்லை. வேத மதத்தை பின்பற்றும் பிராமணர்களுக்கு புத்தகம் உண்டு. வேதங்கள் இருக்கிறது.



அவர்கள் ஐரோப்பிய pagan மதங்களை போல வானில் இருக்கும் பெரிய தெய்வங்களை கொண்டவர்கள் sky gods. இவர்கள் அரசாளும் மன்னர்களின் கடவுள்களை வேத மதத்திற்குள் இழுத்து கொண்டனர். சிவன், விஷ்ணு போன்றவர்கள் இப்படியாக வேத மதத்திற்குள் இணைந்தவர்கள்.



பல கடவுள்கள் ஒரே கடவுள்களின் அவதாரம் என்றும் உதாரணமாக போர் கடவுள் கொற்றவை சிவனின் மனைவி பார்வதியின் அவதாரம் என்று மாறியதை போல (பழையோர், கண்ணம்மார் செல்வி, காடு கிழாள், கடல் கேழு செல்வி போன்ற பெண் குறுந்தெய்வங்கள் எல்லாம் பார்வதியாக மாறிவிட்டது),



முருகன் வேத மதத்திற்குள் சென்றதும் சுப்ரமணியன் ஆனது போல... அதிகாரத்திற்கு தேவையான கடவுள்களை எல்லாம் குடமுழுக்கு செய்து தங்களுக்குள் இழுத்து கொண்டது வேத மதம். கடைசியாக புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்பது வரை.



கிராமத்தின் காவல் தெய்வங்களுக்கு செல்வாக்கும் கூட்டமும் பெருகும்போது (சமயபுரம், புன்னைநல்லூர், வலங்கைமான்) வருமானம் அதிகரிக்கும்போது கும்பாபிஷேகம் செய்து அவை பூசாரிகளிடமிருந்து பிராமண அர்ச்சகர்களிடம் கைமாறுகிறது. கூட்டம் சேராத சுடலை மாடனை அவர்கள் கண்டு கொள்வதில்லை.



இதற்கு காரணம், இந்த கிராம தெய்வங்களை வழிபடுபவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாததாலும், வேத மதத்தில் முறையான சடங்கு பூஜைகள் ஆகமங்கள் விதிகள் இருப்பதாலும் எளிய மக்கள் அதற்கு மாறிவிடுகிறார்கள். பின்னர் அந்த கோவில்களுக்கு ஸ்தல புராணங்கள் எழுதப்படுகின்றன.



என்னதான் மாரியம்மன் promote ஆகி பெரும் தெய்வங்களுடன் இணைந்தாலும் மாரியம்மனை வழிபடாத சுடலை மாடன் பக்தர்களுக்கு சமயபுரத்தின் ஸ்தல புராணத்தின் மீது ஆர்வம் இருப்பதில்லை. அல்லது சுடலை மாடனை கைவிட்டு சாய் பாபா போன்ற பிரபலமான தெய்வங்களுக்கு மாறிவிடுகிறார்கள்.

இப்படியாக பல குறுந் தெய்வங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இப்படி இந்து மதத்தில் பல கடவுள்களுக்கு நூல்களோ, புராணமோ இல்லை. நூல்களும் புராணங்களும் இருக்கும் சில கடவுள்களுக்கும் அந்த நூல்கள் எல்லாருக்குமானது இல்லை. அவைகள் பிராமணர்களுக்கு மட்டுமே (ஏனெனில் எழுதியது அவர்கள் தான்)

அவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் அவர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்ற கடுமையான விதிகளும் இருந்திருக்கிறது. கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் போன்றவை ஒரு survival மதம் என்று சொல்லலாம்.

அதாவது அரசியல் அடக்குமுறையில் இருந்து தப்பிக்க ஒரு குழுவாக இயங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு அக்காலத்தில் இருந்து இருக்கிறது. குழு ஒற்றுமையை பேணி பாதுகாக்க மதத்தை tool ஆக பயன்படுத்தினார்கள். so எல்லாரும் புனித புத்தகத்தை படிச்சீங்களா? அவன் படிச்சானா? இவன் படிச்சானா?

நாளைக்கு prayer எல்லாரும் வரணும், நாம எல்லாம் ஒன்னா தான் இருக்கணும், நமக்குள்ள சண்டை போடக்கூடாது, என்றெல்லாம் குழு ஒற்றுமையை பேணியிருக்கிறார்கள் அது இன்றளவும் தொடர்கிறது.



ஆனால் இந்து மதத்தில் அப்படி இல்லை. சின்ன சின்ன குழுவாக அங்கங்கே இஷ்டப்பட்ட தெய்வங்களை வழிபட்டவர்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள்.

அதில் ஒரு குழு, 'நீங்க எல்லாம் போய் உங்களுக்கு allot பண்ணுன வேலையை பாருங்க. சாமி கும்பிடுறது பூஜை பண்ணுவது எல்லாம் நாங்க பாத்துக்கிறோம். உங்களுக்கு அதெல்லாம் தெரியாது' என்று சொல்லி இருக்கிறார்கள். மக்களும் தலையை ஆட்டி இருக்கிறார்கள்.



இது பல நூற்றாண்டுகளாக வேலை செய்து இருக்கிறது. இப்போ, நான் ஏன் அர்ச்சகராக ஆக கூடாதா? நான் கோவிலுக்கு போக கூடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழவும், திரும்பவும் ஒரு religious identity யை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.



'இந்துக்களே ஒன்று கூடுங்கள். நம்மை பிரிக்க நினைக்கிறார்கள். மனுநீதியில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. சாதியே கிடையாது' என்றெல்லாம் சொல்கிறார்கள். 'கஷ்ட நேரத்துல எதோ ஒரு சாமியை கும்பிட்டா போதும்' என்பது தான் பெரும்பான்மையான மக்களின் எண்ணமாக இருக்கு.



அதனால் தான், 'நீ போய் உனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை பாரு நான் பூஜை பண்ணி உன் கஷ்டத்தை போக்குகிறேன்' என்ற போது அதை மக்கள் ஏற்று கொண்டார்கள்.

இன்றும், 'எதுக்கு எப்பவோ எழுதுன புத்தகத்துல இது தப்பு அது தப்பு ன்னு குட்டையை குழப்பிக்கிட்டு இருக்காங்க? எதோ ஒரு சாமியை கும்பிட்டு போறோம் அது சுடலை மாடனா இருந்தா என்ன? சுப்ரமணியனா இருந்தா என்ன? காலம் காலமா அவங்க தானே பூஜை பண்ணி இருக்காங்க எல்லாரும் நல்லா தானே இருக்கோம்.

என்ன கெட்டு போச்சு? இப்போவும் அதையே தொடராம சும்மா எதையாவது தூக்கிட்டு வந்து பிரச்னை பன்றாங்க. நாமெல்லாம் இந்துக்கள் அவ்ளோதான்' என்று மக்கள் சொல்கிறார்கள். இந்த பெரும்பான்மையான மக்களுக்கு புனித நூல்களை படிக்கவும் அதில் இருப்பதை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இருப்பதில்லை.

'எங்க தாத்தா இதான் follow பண்ணார், எங்க அப்பா இதான் follow பண்ணார் நானும் அதையே பண்றேன் அதான் safer bet' என்று நினைக்கிறார்கள்.


Comments