Posts

இந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்து கடவுள்கள்கள் என சொல்லப்படுகிற கடவுள்களின் நூல்கள் தெரியவில்லை ??

எனக்கு ஒரு சந்தேகம் இஸ்லாமியனுக்கு குரான் தெரிந்துருக்கும் ,கிருத்துவனுக்கும் பைபிள் தெரிந்துருக்கும் .ஆனால் இந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்து கடவுள்கள்கள் என சொல்லப்படுகிற கடவுள்களின் நூல்கள் தெரியவில்லை ?? கிறிஸ்துவம் இஸ்லாம் இவை எல்லாமே புனித புத்தகங்களை ஆதாரமாக வைத்து தோன்றிய மதங்கள். முஹம்மது நபிகள், யூதர்கள் கிறிஸ்துவர்களை People of the Book என்றுதான் குறிப்பிடுகிறார். சொல்லப்போனால் அவருக்கு அதில் அதீத ஆர்வம் என்று கூட சொல்லலாம். புனித புத்தகம் தான் யூதர்கள் கிறிஸ்துவர்களை அவர்களது நம்பிக்கையில் இருந்து வழி மாறாமல் காக்கிறது என்று நினைத்தார். இஸ்லாமிற்கும் ஒரு புத்தகத்தை அவர் குடுத்தார். so இந்த 3 மதங்களிலும் கடவுள் வழிபாட்டை விட கடவுளின் வார்த்தைக்கு தான் அதிக முக்கியத்துவம். எனவே அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் அந்த புத்தகத்தை படித்திருப்பதும் அதை பின்பற்றுவதும் கட்டாயம். அடுத்து பாதிரியார்கள் நிறைய கண்டுபிடிப்பு நிகழ்த்தி இருப்பார்கள். காரணம், அவர்கள் புனித புத்தகத்தை படிக்கவும் அதை மொழிபெயர்க்கவும் மற்ற நாடுகளுக்கு பிரசங்கம் செய்யவும் எழுத படிக்க மற்றும் பிற புத்தகங்களை ப...